GET OUT STALIN என பதிவிடுவேன்.., கெடு விடுத்த அண்ணாமலை
நாளை காலை 6 மணிக்கு GET OUT STALIN என பதிவிடுவேன் என அண்ணாமலை திமுக விற்கு கெடு விடுத்துள்ளார்.
மேலும், அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு எதிர் சவால் விடுத்துள்ளார்.
அண்ணாமலை கூறியதாவது..,
அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி சவால் விடுத்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறேன். அண்ணா சாலைக்கு நான் எங்கு, எப்போது வர வேண்டுமென்று திமுகவினர் கூறட்டும், அங்கு நான் வருகிறேன்.
அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொன்னால் தனியாக வருகிறேன். பாஜகவினர் யாரும் என்னுடன் வர மாட்டார்கள், நான் தனியாக வருகிறேன், திமுகவினர் அனைத்துப் படைகளையும் திரட்டி என்னைத் தடுத்து நிறுத்தட்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக ஐடி விங்கிற்கு ஒரு நாள் அவகாசம் தருகிறோம், Get out modi என எவ்வளவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். நாளை(பிப். 21) காலை 6 மணிக்கு Get Out Stalin என்பதை பதிவிட இருக்கிறேன்.
இது எவ்வளவு டிரெண்டாகிறது என்பதைப் பார்ப்போம். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |