கோல்கீப்பர் உதைத்ததில் கால்பந்து வீரர் மரணம்! அதிர்ச்சி வீடியோ
கானாவில் கால்பந்து வீரர் ஒருவர் எதிரணி வீரர் உதைத்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி சம்பவம்
கானா நாட்டில் அமெச்சூர் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. அப்போட்டியில் இமானுவல் என்று அறியப்படும் வீரர் ஒருவர், கோல் கம்பத்தை நோக்கி முன்னேறி சென்றுகொண்டிருந்தார்.
Trending Video: A young footballer is alleged to have died after this devastating collision with the goalkeeper 🇨🇲 pic.twitter.com/2B7vPG5YkM
— Trending Explained (@TrendingEx) June 17, 2026
அப்போது எதிரணி கோல் கீப்பர் பந்தை கைப்பற்ற வேகமாக ஓடிவந்து இமானுவலை தாக்கினார்.
அவர் உதைப்பது போல் சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில் தெரிகிறது.
விசாரணை
கோல்கீப்பரின் முழங்கால் தாக்கியதில் இமானுவலின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் வேகமாக தரையில் விழுந்தார்.
இதனையடுத்து இமானுவல் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |