நாளை கடவுள் உலகை முடிவுக்கு கொண்டுவரப்போகிறார்: கானா நபருக்கு பணத்தை கொட்டும் மக்கள்
கானாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் நபர், கிறிஸ்துமஸ் நாளில் உலகம் முடிவுக்கு வரப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உலகப் பேரழிவு
பல ஆண்டுகளாக உலகப் பேரழிவு பற்றி பலர் தீர்க்கதரிசனம் கூறி வருகின்றனர். அந்த வகையில் கானாவைச் சேர்ந்த ஈபோ நோவாவும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தன்னைத் தானே ஒரு தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் ஈபோ நோவா, ஆதி பிதாவான நோவாவின் நாட்களில் ஏற்பட்டது போல, உலகம் ஒரு பெரும் வெள்ளப்பெருக்கிற்கு உள்ளாகும் என்று கூறுகிறார்.
சாக்கு ஆடை அணிந்திருக்கும் அந்நபர், 2025 டிசம்பர் 25 (நாளை) அன்று ஒரு இராட்சத வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவிக்கிறார்.
கடவுளின் கட்டளை
அவர், ஆதியாகமத்தில் யெகோவாவால் வழிநடத்தப்பட்ட நோவாவைப் போலவே ஒரு பேழையை உருவாக்க கடவுள் தனக்கு கட்டளையிட்டதாகக் கூறுகிறார்.

மூன்று ஆண்டு வெள்ளப்பெருக்கை தாங்கும் வகையில் பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் அவரை தீவிரமாக பின்தொடர்பவர்கள், அவருக்கு பணம் அளிப்பதுடன், உலகம் அழியப் போகிறது என்று நம்பி தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |