உலகம் அழிந்து விடும்! பரபரப்பை உருவாக்கிய கானா தீர்க்கதரிசி கைது
உலகம் அழிந்து விடும் என்று கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டு தீர்க்கதரிசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களை ஏமாற்றிய கானா தீர்க்கதரிசி
கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னை தானே தீர்க்கதரிசி என்று கூறிக் கொண்டுள்ளார்.
இவர் சமீபத்தில் டிசம்பர் 25ம் திகதி உலகம் அழியப் போவதாகவும், கடவுள் பேரில் மக்களை காப்பாற்ற 8 கப்பல்களை கட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக அப்பகுதி மக்களிடம் எபோ நோவா பணமும் வசூலித்து வந்துள்ளார். மேலும் சிலர் அவர் கட்டி வரும் கப்பலில் இடம் பிடிப்பதற்காக அவரை அடிக்கடி பார்க்கவும் வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது தீர்க்கதரிசனம் பொய்த்து போனதை அடுத்து, மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
கானா தீர்க்கதரிசி கைது
இந்நிலையில் டிசம்பர் 25ம் திகதிக்கு பிறகு தனது பேச்சை எபோ நோவா மாற்றிக் கொண்டுள்ளார்.
அதில், தான் கடவுளிடம் நேரடியாக பிரார்த்தனை செய்வதால், உலகம் அழிவதை கடவுள் தற்காலிகமாக தள்ளி வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பலர் எபோ நோவாவின் பேச்சால் ஆத்திரமடைந்த நிலையில், பொதுமக்களிடையே பீதியை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியதற்காக எபோ நோவா-வை கானா பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |