உலக அழிவை தள்ளிவைத்துள்ள கடவுள் - பேச்சை மாற்றிய தீர்க்கதரிசி; பணத்தை இழந்த மக்கள்
கிறிஸ்துமஸ் முதல் உலகம் அழியப்போவதாக கூறிய தீர்க்கதரிசி, கடவுள்உலக அழிவை தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் முதல் உலகம் அழியும்?
உலகம் அழிய போகிறது என்ற கணிப்பை அவ்வப்போது மத அறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கூறி வந்தாலும் தற்போது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதே போல், தன்னை தானே கடவுளின் அவதாரமாக அறிவித்துள்ள கானாவை சேர்ந்த எபோ நோவா, கிறிஸ்துமஸ் முதல் விடாது மழை பெய்து உலகம் அழியும் என தெரிவித்தது இணையத்தில் வைரலானது.

இந்த அழிவில் இருந்து தப்பிக்க, என்னுடைய பேழைகளில் ஏறி தப்பிக்கலாம், 10 பேழைகளை கட்ட கடவுள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பேழைகளை கட்டுவதை தான் ஆய்வு செய்வது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டார்.
உலக அழிவை தள்ளிப்போட்ட கடவுள்
இதனையடுத்து, உலகம் அழியும் என்ற பயத்தில் இருந்த மக்கள் தங்களது சொத்துக்களை விற்று, பேழைகளில் இடம் பிடிக்க அவருக்கு பணத்தை வழங்கினர்.
Happening live in 𝐺𝐻𝐴𝑁𝐴🇬🇭 .
— Dami’ Adenuga (@DAMIADENUGA) December 24, 2025
Ghanians are hurrying to secure spots in one of the 8 arks built by Prophet Eboh Noah, who claims God revealed that the world will end tomorrow, December 25th, by flooding, and only those in his ark will be saved. pic.twitter.com/3XIird51sQ
இந்நிலையில் தனது பிராத்தனைகளை ஏற்ற கடவுள், உலக அழிவை தள்ளிப்போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
TRENDING 🚨: Ebo Noah extends his gratitude to everyone who supported him just hours after getting a brand new Mercedes Benz B-Class worth $89,000.
— WithAlvin 🇬🇭 (@withAlvin__) December 24, 2025
Do you believe the world will flood on 25th or not? https://t.co/zKIxm6qKaQ pic.twitter.com/mlAjY8uXvF
இதற்காக அவர் 3 நாட்களாக விரதம் மற்றும் பிரார்த்தனையில் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டார். இதனையடுத்து, புதிய பென்ஸ் கார் ஒன்றில் வருவது போலவும் வீடியோ வெளியிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |