மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பேய் தோன்றிய விவகாரம்: உண்மை வெளியானது
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது தோன்றிய கருப்பு நிற உருவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலை நாடுகளில் நிலவும் நம்பிக்கைகள்
மேலை நாடுகளில் மக்களிடையே உலவும் நம்பிக்கைகளில் ஒன்று, மரணமடைய இருக்கும் நபரின் ஆன்மாவை சேகரிப்பதற்காக Grim Reaper என்னும் ஒருவர் வருவார் என்பதாகும்.
இந்த Grim Reaper, கையில் நீண்ட குச்சியின் முனையில் அமைந்துள்ள அரிவாளை ஏந்தி, தலை முதல் கால் வரை மறைக்கும் வகையிலான கருப்பு அங்கி அணிந்து வருவதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
Source: The Sun
இந்நிலையில், மன்னருடைய முடிசூட்டுவிழா வீடியோவில், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் வாசலில், Grim Reaperஐப் போன்றே காட்சியளிக்கும் ஒரு நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சி பதிவாக, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
யார் அந்த Grim Reaper?
அந்த வீடியோவைப் பார்த்த மக்கள், அது டயானாவின் ஆவியாக இருக்கலாம் என்றும், மாறுவேடம் அணிந்த மேகனாகக்கூட இருக்கலாம் என்றும் பல கருத்துக்களைக் கூறத் துவங்கினர்.
ஆனால், அது யார் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
a mysterious figure appeared during the coronation ceremony in the United Kingdom, where he appeared wearing a black robe and holding a machete as if he was a "grim reaper" !!#Coronation #QueenCharlotte pic.twitter.com/AuTXwgYvct
— Mystery Empire (@mysteryempiire) May 6, 2023
அந்த நபர் யார் என வெஸ்ட்மின்ஸ்டர் அபே ஊழியர்களிடம் விசாரித்தபோது, அது, அங்கு அன்றாடப் பணிகளைச் செய்யும் verger என்னும் ஆலயப் பணியைச் செய்யும் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த verger என்பவர், ஆலயம் தொடர்பான பணிகளில் உதவும் ஒரு ஊழியராம். அவர்கள் சில நேரங்களில் பிஷப் முன்பாக ஒரு நீண்ட குச்சியை பிடித்துக்கொண்டு நடப்பதுண்டாம்.
ஆக, முடிசூட்டுவிழாவுக்கு இளவரசி டயானாவின் ஆவி வந்துவிட்டது, யாருடைய ஆன்மாவையோ பறித்துக்கொள்ள Grim Reaper வந்துவிட்டார் என்றெல்லாம் எண்ணி பரபரப்படைந்த மக்களுக்கு, உண்மை தெரிந்தபோது சப்பென்று ஆகிவிட்டதாம்!