குழந்தை உறங்கும் அறையில் கமெராவில் சிக்கிய காட்சி: தந்தையின் சந்தேகம்
அமெரிக்க தந்தை ஒருவர், தன் குழந்தை தூங்கும் அறையில் கமெராக்களை பொறுத்தியுள்ள நிலையில், திடீரென அதில் ஒரு வித்தியாசமான காட்சி பதிவாகியுள்ளதை கவனித்துள்ளார்.
கமெராவில் சிக்கிய காட்சி
Image: Getty Images
அமெரிக்காவிலுள்ள Michigan மாகாணத்தில் வழும் Jon Kipke என்பவர், தன் குழந்தை தூங்கும் அறையில் கண்காணிப்புக் கமெராக்களை பொறுத்தியுள்ளார். ஒரு நாள் கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த ஜான், அதில் வித்தியசாமான ஒரு உருவம் தெரிவதைக் கவனித்துள்ளார்.
அந்த கட்சியை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அவர், தான் இப்படி ஒரு காட்சியை இதற்கு முன் கண்டதில்லை என்கிறார். நிழல் போல் யாரோ ஒருவர் தன் குழந்தையின் அருகில் நின்றுகொண்டு குழந்தையைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு காட்சி அதில் பதிவாகியிருந்தது.
விடயம் என்னவென்றால், இந்த காட்சி கமெராவில் பதிவாவதற்கு ஒரு மாதம் முன்புதான் குழந்தையின் தாத்தா மரணமடைந்தாராம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |