Planet-killer: நாளை பூமியை நெருங்கும் பிரம்மாண்ட சிறுகோள்
நாளை, Planet-killer என அழைக்கப்படும் சிறுகோள் ஒன்று பூமியின் அருகில் பயணிக்க உள்ளது.
சிறுகோள் என்பது உண்மையில் சிறியதா?
நாளை, அதாவது, ஜூன் மாதம் 27ஆம் திகதி, Planet-killer என அழைக்கப்படும், asteroid 2011 UL21 என்னும் சிறுகோள் ஒன்று பூமியின் அருகில் பயணிக்க உள்ளது.
என்றாலும், சிறுகோள் என்பது உண்மையில் சிறியதா? பூமிக்கு அருகில் என்பது உண்மையில் பூமிக்கு அருகிலா என்பதை பார்க்கலாம்.
சிறுகோள் அல்லது asteroid என்பது, உண்மையில் சிறியது அல்ல. நாளை பூமிக்கருகில் பயணிக்க இருக்கும் 2011 UL21 என்னும் சிறுகோள், ஒரு மலையின் அளவுக்கு பெரியதாகும்.
அந்த சிறுகோள், 1.1 முதல் 2.4 மைல் அகலம் கொண்டது. டைனோசார்களை அழித்த சிறுகோள்களைவிட இந்த சிறுகோள் ஐந்து மடங்கு பெரியது என கருதப்படுகிறது.
இந்த சிறுகோள் பூமியின் மீது மோதினால், ஒரு கண்டத்தையே காணாமல் போகச்செய்துவிடுமாம். அது மோதுவதால் எழும் தூசு, பூமியின் சுற்றுப்புறத்தையே மாற்றிவிடுமாம். ஆகவேதான் அது planet killer என அழைக்கப்படுகிறது.
அதேபோல, பூமிக்கு அருகில் என கூறப்பட்டாலும், 2011 UL21 சிறுகோள், பூமியிலிருந்து சுமார் 5 மில்லியன் மைல் தொலைவில் பயணிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |