ஜேர்மன் தலைநகரில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் ராட்சத பள்ளங்கள்: எதற்காக தெரியுமா?
ஜேர்மன் தலைநகர் பெர்லின், வறட்சியான ஒரு பகுதியில் அமைந்துள்ளது. ஆக, கோடை வந்துவிட்டாலே பெர்லினில் தண்ணீர் பிரச்சினை பெரிதும் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிடுகிறது.
பெர்லினில் உருவாக்கப்படும் ராட்சத பள்ளங்கள்
ஆகவே, தண்ணீர் பிரச்சினையை சமாளிப்பதற்காக, பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி, பூமிக்கடியில் தண்ணீரை சேகரிப்பதற்காக அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.
Image: Sven Bock/Berliner Wasserbetriebe
அந்த பெரிய பள்ளங்களில் மழை நீரை சேகரித்து, அந்த நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி பயன்பாட்டுக்கு உகந்த நீராக மாற்றுவதுதான் திட்டம்.
அவ்வகையில், இதுவரை ஒன்பது சேமிப்பகங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.
Image: Pedro Becerra/STAGEVIEW
நிரம்பி வழியும் சாக்கடைகளால் ஒரு பிரச்சினை
பெர்லினில் பெருமழை என்றாலே, இன்னொரு பிரச்சினையும் உருவாகிவிடும். அதாவது, சாக்கடைகள் நிரம்பி வழியத் துவங்கிவிடும்.
அப்படிப்பட்ட நேரத்தில், சேமிப்பகங்களில் அந்த நீரை சேமித்து, அதை சுத்திகரித்து, மழை நின்றபின் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆறுகளில் விடுவதற்கான திட்டத்துக்காகவும் இந்த பிரம்மாண்ட பள்ளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
Image: Alex Anton/Zoonar/picture alliance
இப்படிச்செய்வதால், சமீபத்தில் பிரான்ஸ் ஆற்றில் நிகழ்ந்ததுபோல, ஆற்று நீரில் மனிதக் கழிவுகள் கலப்பதைத் தடுக்கமுடியும்.
அத்துடன், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும் கட்டிடங்களில் உருவாக்கப்பட்டுவருகின்றன. இப்படிச் செய்வதால் மழைநீர் வீணாவதைத் தடுப்பதுடன், அந்த நீரை சேகரித்து சுத்திகரித்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |