சூரியனில் ராட்சத துளை! 60 பூமிகளை மொத்தமாக நிரப்பலாம்
சூரியனின் மேற்பரப்பில் சமீபத்தில் உருவான ஒரு ராட்சத துளையை வானியலாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
60 க்கும் மேற்பட்ட பூமிகளை
குறித்த துளையில் இருந்து பூமியை நோக்கி அதிவேக சூரியக் காற்று வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர். டிசம்பர் 2ம் திகதி அடையாளம் காணப்பட்ட இந்த மர்ம இருள், கிட்டத்தட்ட 4,97,000 மைல்கள் அசாதாரண அகலத்திற்கு விரிவடைந்துள்ளது.
@esa
இப்படி உருவான பள்ளமானது 60 க்கும் மேற்பட்ட பூமிப் பந்துகளை அருகருகே நிரப்ப போதுமானது என்றே வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ராட்சத துளையானது ஒரு நாளுக்குள் அதன் உச்ச அளவை எட்டியது என்றும் டிசம்பர் 4 முதல் பூமியை நேரடியாக எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற துளைகள் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படுவதுண்டு என குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், ஆனால் இது போன்று ஒரே நாளில் விரிவடைந்து அதன் உச்ச அளவை எட்டியதில்லை என்றும், அதுவே ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகவும் கூறுகின்றனர்.
சுழற்சியின் உச்சத்தை நெருங்கும்
துளை ஏற்பட்ட வேளை என்பது சூரியன் அதன் 11 ஆண்டு கால செயல்பாட்டு சுழற்சியின் உச்சத்தை நெருங்கும் நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சூரியக் காற்றானது வினாடிக்கு 500 முதல் 800 kms வரையில் வீசியதும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
@getty
மட்டுமின்றி, சூரியக் காற்றானது எதிர்பார்த்ததை விட குறைவான தீவிரத்தை பதிவு செய்துள்ளதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய ராட்சத துளையனாது பூமியின் முகத்திலிருந்து விலகிச் செல்லும் திசையில் நகரும்போது பூமிக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றே வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |