பிரித்தானியாவின் சர்ரேவில் ராட்சத பள்ளம்: நீர் விநியோகம் பாதிப்பு, முக்கிய சாலை மூடல்
பிரித்தானியாவின் சர்ரேவில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அதன் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.
சாலையில் ஏற்பட்ட பள்ளம்
சர்ரேவில்(Surrey) காட்ஸ்டோன்(Godstone) கிராமத்தில் உள்ள சாலையில் எதிர்பாராத விதமாக திடீரென மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் Oxted சாலை மற்றும் Bletchingley சாலை சந்திப்புக்கு இடையிலான முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, பள்ளம் 62 அடி (19 மீட்டர்) வரை பெரியதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது, இருப்பினும் அதிகாரப்பூர்வ உறுதிப்பாடு நிலுவையில் உள்ளது.
வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்
திங்கட்கிழமை இரவு பள்ளம் ஏற்பட்டதாக வந்த தகவல்களை அடுத்து, சர்ரே காவல்துறை தகவலை உறுதி செய்தது.
மேலும் முன்னெச்சரிக்கையாக, அருகிலுள்ள பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர், மேலும் பள்ளத்தை சுற்றி 100 மீட்டர் பாதுகாப்பு சுற்றளவு அமைக்கப்பட்டுள்ளது.
பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் வரை பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பகுதியை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய நீர் குழாய் வெடித்ததால் தான் பள்ளம் ஏற்பட்டது என்பதை SES வாட்டர் ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளது.
அத்துடன் உள்ளூர் நீர் வினியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பையும் SES வாட்டர் ஒப்புக்கொண்டதுடன், தங்கள் நெட்வொர்க் மூலம் நீரை மறுசீரமைத்து சேவையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |