இப்படியா நடந்துகொள்வது? ரிஷாப் பண்ட்டிற்கு அபராதம் விதிக்க வேண்டும் - விளாசிய ஜாம்பவான் வீரர்
நடுவரிடம் வாக்குவாதம் செய்த ரிஷாப் பண்ட்டிற்கு அபராதம் விதிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் விமர்சித்துள்ளார்.
ரிஷாப் பண்ட் வாக்குவாதம்
லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டெல்லி அணித்தலைவர் ரிஷாப் பண்ட் 24 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.
ஆனால், பண்ட் ஃபீல்டிங்கின்போது கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் படிக்கல் வீசிய Wide-ball ரிவ்யூவில் டெல்லி அணி தோல்வியடைந்தது. இதனால் பண்ட் கோபமடைந்தார்.
ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சனம்
ரிஷாப் பண்ட்டின் இந்த செயல் குறித்து அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist) விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், ''நடுவர்கள் ஆட்டங்களில் சிறந்த கட்டுப்பாட்டை எடுக்க வேண்டிய மற்றொரு உதாரணத்தை இன்றிரவு (நேற்று) பார்த்தேன், அது எந்த வடிவத்திலும் உள்ளது. விடயங்களை முன்னோக்கி நகர்த்துவதில் அவர்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்ய வேண்டும்.
அதை ரிஷாப் பரிசீலனை செய்தாரா என்பதில் தகராறு ஏற்பட்டது. சரி, மறுஆய்வு அழைப்பில் தவறான தகவல் தொடர்பு ஏற்பட்டது. ஆனால், அவர்கள் அங்கேயே நின்று அதைப் பற்றி 3-4 நிமிடங்கள் பேசினார்கள்.
இது மிகவும் எளிமையான உரையாடல், நான் நம்புகிறேன். ரிஷாப் எவ்வளவோ புகார் கொடுத்தாலும் சரி, வேறு எந்த வீரர் புகார் செய்தாலும் சரி, நடுவர்கள் 'அது முடிந்துவிட்டது' என்று கூறிவிட்டு விரைவாக செல்ல வேண்டும். ஆனால் தொடர்ந்து பேசினால் அபராதம் விதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |