கவாஸ்கரின் 42 வருட சாதனையை முறியடித்த சுப்மன் கில் - அணித்தலைவராக மற்றுமொரு சாதனை
ஓவல் டெஸ்டில் அணித்தலைவராக சுப்மன் கில் 2 சாதனைகளை படைத்துள்ளார்.
ஓவல் டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் கடைசி டெஸ்ட் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 2 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஸ்வால் 2 ஓட்டங்களிலும், கே.எல்.ராகுல் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 26 ஓட்டங்களிலும், சுப்மன் கில் 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இத்துடன், இந்த தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் 3 சதங்களுடன் சுப்மன் கில் 737 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
சுப்மன் கில் சாதனை
இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
முன்னதாக 1978/79 ல் மேற்கிந்திய தீவுக்கு எதிரான தொடரில், சுனில் கவாஸ்கர் 732 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு அணித்தலைவரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.
இதன் மூலம், கவாஸ்கரின் 42 வருட சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ஒரு அணித்தலைவர் எடுத்த அதிக ரன்கள் என்ற சாதனையையும் சுப்மன் கில் பெற்றுள்ளார்.
1966 இங்கிலாந்து தொடரில் மேற்கிந்திய தீவு அணித்தலைவர் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் 722 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |