சிக்ஸர் அடித்து அரைசதம் விளாசிய ரோகித்! பாகிஸ்தானை தெறிக்கவிடும் கில்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக அரைசதம் விளாசினர்.
இந்திய அணி துடுப்பாட்டம்
கொழும்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா களமிறங்கினர்.
Twitter (BCCI)
கில், ரோகித் அதிரடி அரைசதம்
அதிரடியில் மிரட்டிய கில் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் பொறுமையாக ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சதாப் கான் ஓவரில் வேகமெடுத்தார். அவரது ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார்.
அதன் பின்னர் மீண்டும் பந்துவீச வந்த சதாப் கானை சோதித்தார் ரோகித். அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரியும் விளாசினார்.
இந்த ஜோடி 16 ஓவர்களில் 118 ஓட்டங்கள் குவித்துள்ளது. ரோகித் 56 ஓட்டங்களுடனும், கில் 55 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
Twitter (ICC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |