சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல்: எப்படி செய்ய வேண்டும்?
இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம் உட்பட பல எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இஞ்சி நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
மேலும், நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இஞ்சி உதவி செய்கிறது. இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.
இஞ்சியை ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி நீரில், தேன் கலந்து குடித்து வந்தால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள் -
இஞ்சி - 3 துண்டு
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய் - 3 பெரிய துண்டு
உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிதளவு
கடுகு - அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தம் செய்து துண்டு, துண்டாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, இஞ்சியை பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், காஞ்சமிளகாய், உழுந்தப்பருப்பு, தேங்காய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் ஆற வைத்து, ஒரு மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக புளி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த விழுதில் சேர்த்தால் சுவையான இஞ்சி துவையல் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |