சாலை ஓரத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த 26 வயது இளம்பெண்! பிரேத பரிசோதனையில் தெரியவந்த உண்மை
அமெரிக்காவில் சாலை ஓரத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஹவுஸ்டன் சாலையில் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி சாலை ஓரத்தில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார்.
அந்த வழியாக காரில் வந்த கவுன்சில் ஊழியர் ஒருவர், பெண் சடலமாக கிடப்பதை பார்த்து உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தகவல் கூறியிருக்கிறார்.
இதன் பின்னர் சடலம் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் Alexis Sharkey (26) என தெரியவந்தது.
இந்நிலையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து தடய அறிவியல் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
Alexis கொலை செய்யப்பட்டது மிகுந்த மன வேதனையளிப்பதாக அவரின் தாயார் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கூறியுள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

