துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 14 வயது மாணவியை கொன்ற காதலன்!
தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் 10ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
காணாமல் போன மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ரேணுகா (14). இவர் கடந்த 23ஆம் திகதி பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் மாணவியின் தந்தை மாரி பொலிஸில் புகார் அளித்தார். உடனே பொலிஸார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், ரேணுகா கடைசியாக யோகேஸ்வரனிடம் (21) பேசியதாக தெரிய வந்தது.
கொலை செய்த இளைஞர்
இதனையடுத்து யோகேஸ்வரனைப் பிடித்து விசாரித்தபோது ரேணுகாவை அவர் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சி அளித்தார்.
அவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தனிமையில் சந்தித்து பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது யோகேஸ்வரன் ஆத்திரத்தில் ரேணுகாவை துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அவரின் உடலை முட்புதரில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.
அதன் பின்னர் ரேணுகாவின் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யோகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Getty Images/iStockphoto
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |