கேபிடல் கலவரத்தில் சபாநாயகரின் லேப்டாப்பை திருடியதாக பெண் கைது! திருடியதன் காரணத்தை அம்பலப்படுத்திய முன்னாள் காதலன்...
அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரத்தின்போது ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகத்தில் இருந்து மடிக்கணினியை திருடியதாக, முன்னாள் காதலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 6-ஆம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க கேபிடல் மீது நடத்தப்பட்ட கலவரத்தில், நாடாளுமன்றத்தில் உள்ள ஏராளமான பொருட்கள் மற்றும் சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டது.
இந்த கலவரத்தில் இருப்பட்டவர்களில் சில முக்கியமான நபர்களை அமெரிக்க கேபிடல் பொலிஸ் அடையாளம் கண்டு வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் 125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலவரத்துக்கு இடையில் காணாமல் போன சபாநாயகர் நான்சி பெலோசியின் மடிக்கணினி பற்றி FBIக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் திருடியது ரிலே ஜூன் வில்லியம்ஸ் எனும் பென்சில்வேனியாவைச் சேர்ந்த பெண் என அறியப்படுகிறது.
அவர், அந்த மடிக்கணினியை அல்லது அதன் ஹார்டு டிஸ்கை ரஷ்யாவில் உள்ள தனது நண்பருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அவரது நண்பர் அதை ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறை சேவையான S.V.Rக்கு விற்க திட்டமிட்டுள்ளார் என்றும், வில்லியம்ஸின் முன்னாள் காதலன் தகவல் கொடுத்ததாக FBI தெரிவித்துள்ளது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்ட அவரது கைது வாரண்டில், வில்லியம்ஸ் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை, ஆனால் சட்டவிரோதமாக கேபிட்டலுக்குள் நுழைந்தது மற்றும் ஒழுங்கற்ற நடத்தைக்காக பதிவிட்டுள்ளதாக FBI தெரிவித்துள்ளது.
பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பர்க்கில் வசிக்கும் வில்லியம்ஸின் தாய், தனது மகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசியல் மற்றும் “தீவிர வலதுசாரி செய்தி பலகைகள்” மீது திடீர் அக்கறை காட்டியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
கேம்ப் ஹில்லில் வசிக்கும் அவரது தந்தை, அவரும் அவரது மகளும் கலவரம் நடைபெற்ற நாளில் வாஷிங்டனுக்குச் சென்றதாகவும், ஆனால் வில்லியம்ஸ் அவருடன் ஒன்றாக தங்கியிருக்கவில்லை என்றும், பின்னர் ஹாரிஸ்பர்க்கிற்கு திரும்புவதற்காக மட்டுமே சந்தித்ததாக உள்ளூர் சட்ட அமலாக்கத்திடம் தெரிவித்துள்ளார்.
வில்லியம்ஸ் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஒரு பையை எடுத்துக்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு வெளியே செய்வதாகக் கூறி விட்டதைவிட்டு சென்றதாக வில்லியம்ஸின் தாயார் உள்ளூர் சட்ட அமலாக்கத்திடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும், அவர் தனது தொலைபேசி எண்ணையும் மாற்றி பல சமூக ஊடக கணக்குகளை நீக்கியதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
வில்லியம்ஸ் கலவரத்தில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், லேப்டாப்பை ரஷ்யா உளவாளியிடம் விற்பதற்காக அவர் தான் திருடியுள்ளாரா என்பது குறித்தது விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
