ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் அடுத்தடுத்து மரணம்! உணவில் விஷம் கலந்த இளம்பெண்
பாகிஸ்தானில் இளம்பெண்ணொருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதலுக்கு எதிர்ப்பு
சிந்து மாகாணம் கைர்பூர் அருகேயுள்ள ஹைபத் கான் ப்ரோஹி கிராமத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேர், உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது.
தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், குறித்த இளம்பெண் தனது காதலருடன் சேர்ந்து வீட்டில் ரொட்டி தயார் செய்ய பயன்படுத்திய கோதுமையில் விஷம் கலந்துள்ளார்.
இளம்பெண் கைது
கடந்த ஆகத்து 19ஆம் திகதி இச்சம்பவம் நடந்த நிலையில், பொலிஸார் குறித்த இளம்பெண்ணையும் அவரது காதலரையும் கைது செய்தனர்.
மேலும், பொலிஸார் தரப்பில் கூறும்போது, தான் விரும்பிய நபரை திருமணம் செய்துகொள்ள தனது குடும்பம் அனுமதிக்கவில்லை என்பதால், கோதுமையில் விஷம் கலந்ததாக அப்பெண் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்த சம்பவம் சிந்து மாகாணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |