பொருளை மீண்டும் வாங்க மறுத்ததற்காக கடைக்காரரை பிளேடால் தாக்கிய சிறுமி
பொருளை மீண்டும் வாங்க மறுத்த காரணத்திற்காக 15 வயது சிறுமி ஒருவர் கடைக்காரரை பிளேடால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
பிளேடால் தாக்கிய சிறுமி
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஹாப்பூரில் 15 வயது சிறுமி ஒருவர் கடைக்காரரை பிளேடால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் பிளேடால் தாக்கிய சிறுமியை தடுக்க முயற்சி செய்கிறார்.
இது தொடர்பாக கடைக்காரரின் சகோதரர் தேவ் சைனி பேசுகையில், "அந்த சிறுமி எங்களிடம் பொருட்களை வாங்கிய பின்னர் வேண்டாம் என்று மீண்டும் கொண்டுவந்து தருவார். நாங்கள் அப்போது அதற்கான பணத்தைக் கொடுப்போம்.
ஆனால், இந்த முறை நாங்கள் வாங்கிய பொருட்களை திருப்பித் தரவோ மாற்றவோ மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால், அந்த சிறுமி வாங்கிய பொருட்களை மீண்டும் கொண்டுவந்து கொடுத்தார். அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம்.
அப்போது எங்களை அந்த சிறுமி பிளேடால் தாக்குவேன் என்று மிரட்டியதால் பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவளுடைய பணத்தைத் திருப்பி கொடுத்தோம்.
பின்னர், பணத்தை பெற்றுக் கொண்ட சிறுமி திடீரெனெ என் சகோதரனை பிளேடால் தாக்கினார். நாங்கள் உடனடியாக சிறுமியை பொலிஸிடம் ஒப்படைத்தோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |