பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் உதவி கோருகிறது.
ரஷ்யாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு வகையான முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவுடனான பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் உதவி கோருகிறது.
ரஷிய செய்தி நிறுவனத்துக்கு ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி பேட்டி அளிக்கையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நல்ல உறவில் இருக்கும் ரஷ்யா, இருநாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |