25 வயது அண்ணனை இடுப்பில் சுமக்கும் தங்கை: பின்னணி
சீனாவில், 25 வயதாகும் தன் அண்ணனை இடுப்பில் சுமக்கும் ஒரு தங்கை, தன் பெற்றோருக்கு வயதாவதால், தான் இனி அவரை முழுமையாக கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
25 வயது அண்ணனை...
சீனாவின் Hunan மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரை, அவர் குழந்தையாக இருக்கும்போது அரியவகை ஹார்மோன் பிரச்சினை ஒன்றும், இதயப் பிரச்சினை ஒன்றும் தாக்கியதால், அவரது உடல் 60 சென்றிமீற்றருக்கு மேல் உயரமாகவில்லை.

அத்துடன், அவரது மூளையும் பாதிக்கப்பட்டுள்ளதால், மன ரீதியிலும் ஒரு குழந்தையாகவே உள்ளார்.
ஒரு நல்ல விடயம் என்னவென்றால், அவர் மீது அவரது பெற்றோரும், அவரது தங்கையான Wang (20)ம் அன்பைப் பொழிகிறார்கள்.

எங்கு சென்றாலும், தன் அண்ணனை ஒரு குழந்தையைப் போல இடுப்பில் சுமந்து செல்கிறார் Wang.

தற்போது வேலைக்குச் செல்லத் துவங்கியுள்ள Wang, இதுவரை என் பெற்றோர் அண்ணனை கவனித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு வயதாகிறது. ஆகவே, இனி நான் அவரை முழுமையாக பொறுப்பெடுத்துக்கொள்வேன் என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |