சுவிஸ் ரயிலில் தனித்து விடப்பட்ட 5 வயது சிறுமி: பரபரப்பை உருவாக்கிய சம்பவம்
சுவிட்சர்லாந்தில் பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமி ஒருத்தி தனித்து விடப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தனித்து விடப்பட்ட 5 வயது சிறுமி
சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருத்தி, Neirivue என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளியில் படித்துவருகிறாள்.
கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 2ஆம் திகதி, Montbovon என்னும் ரயில் நிலையத்தில் அவளை ரயில் ஏற்றி விட்டுள்ளார்கள் அவளது பெற்றோர்.

அவள் Neirivue ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். ஆனால், அவள் அங்கு இறங்கவில்லை.
இத்தனைக்கும், பிள்ளைகளை கவனித்துக்கொள்ள மேற்பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இருந்தும் பிள்ளை ரயிலிலிருந்து இறங்கவில்லை என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
இதற்குள் பிள்ளையைக் காணவில்லை என்ற தகவல் பரவவே, பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளும் பள்ளி அலுவலர்களும் பிள்ளையைத் தேட, அவள் அடுத்த ரயில் நிலையத்தில் நிற்பது தெரியவந்துள்ளது.
பிள்ளைகளை மேற்பார்வை செய்வோர், தாங்கள் முதல் ரயில் நிலையத்தில் ஏறும்போது தங்களுடன் ஆறு மாணவ மாணவியர் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் பிள்ளைகள் ஏற, Neirivue ரயில் நிலையத்தை அடையும்போது, மொத்தம் 60 முதல் 70 ஆக பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதாகவும், தங்களால் பிள்ளைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்னவென்றால், மக்கள் போக்குவரத்துக்கு ரயில்களை பயன்படுத்தவேண்டும் என்பதற்காக, உள்ளூர் அதிகாரிகள் பள்ளிப் பேருந்துகளை ரத்து செய்துவிட்டார்கள்.
அதனால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஏற்கனவே பெற்றோர் எச்சரித்தும், அதிகாரிகள் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், பெற்றோர் பயந்ததுபோலவே நடந்துவிட்டது!
இதற்கிடையில், தங்கள் பிள்ளை தனித்து விடப்பட்டதால் கோபமடைந்துள்ள அந்தச் சிறுமியின் தந்தை, வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |