Alexa மூலம் குரங்கிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்த 13 வயது சிறுமி! என்ன நடந்தது?
திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி அவாஸ் விகாஸ் காலனியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு, வீட்டில் உள்ள உறவினர்கள் வேறு ஒரு அறையில் இருந்தனர்.
அப்போது, நிகிதா தன் சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் உள்ள சமையலறை அருகே விளையாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சமையலறைக்குள் திடீரென குரங்கு நுழைந்தது.
வீட்டில் உள்ள மற்றவர்கள் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்தது அவர்களுக்கு தெரியவில்லை. சமையலறைக்கு வந்த குரங்கு பாத்திரங்களை எடுத்து வீச ஆரம்பித்தது.
பின்பு, நிகிதாவையும், குழந்தையும் நோக்கி குரங்கு நகர்ந்ததால் என்ன செய்வதென்றே தெரியாமல் சிறுமி இருந்தார். அப்போது குழந்தையும் அலற தொடங்கியது.
அங்கிருந்த ஃபிரிட்ஜின் மீது Alexa (எலக்ட்ரானிக் சாதனம்) இருப்பதை பார்த்த நிகிதா, அலெக்ஸ்சாவிடம் குரங்கை பார்த்து குரைக்குமாறு கூறினார். பின்னர், அலெக்ஸாவும் குரங்கை போலவே குரைக்க, அதை கேட்ட குரங்கு பயத்தில் தப்பியது.
இதனால், நிகிதாவின் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து நிகிதாவின் உறவினர்கள் கூறும்போது, Alexa -வை நிகிதா பயன்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |