பகையை மறந்து மாலத்தீவுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! நிம்மதியில் மக்கள்
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாலத்தீவு எடுத்தபோதிலும் அந்நாட்டின் உணவு பற்றாக்குறையை தீர்க்க இந்திய அரசு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
மாலத்தீவு & இந்தியா பிரச்சனை
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான மாலத்தீவு எப்போதும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டில் நடந்த ஆட்சி மாற்றாத்தால் தலைகீழாக மாறிவிட்டது.
மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு (Mohamed Muizzu) சீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை அந்நாடு எடுக்க தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "லட்சத்தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதனால், இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதை புறக்கணித்து வருகின்றனர்.
ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டும்! ரூ.4 லட்சம் வருமானம் கொண்ட பெண்ணின் எதிர்பார்ப்பு
இதனால், மாலத்தீவு சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. மேலும், மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை அந்நாடு அதிரடியாக வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனால், மாலத்தீவில் தற்போது உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது.
உதவிக்கரம் நீட்டும் இந்தியா
இந்நிலையில், தனது பகையை மறந்து மாலத்தீவுக்கு உதவிட இந்தியா முன்வந்துள்ளது. அதன்படி, 2024 - 25 -ம் நிதியாண்டுக்கான உணவுப்பொருள் ஏற்றுமதியில் உதவி செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ம் திகதி முதல் அரிசி, கோதுமை, சர்க்கரை, உருளைக்கிழங்கு, வெங்காயம், முட்டை ஆகியவற்றை டன் கணக்கில் மாலத்தீவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நடைமுறையில் உள்ள எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் 124,218 மெட்ரிக் டன் அரிசி, 109,162 டன் கோதுமை மாவு, 64,494 டன் சர்க்கரை, 21,513 டன் உருளைக்கிழங்கு, 35,749 டன் வெங்காயம், 427.5 டன் முட்டை, 1 மில்லியன் டன் ஆற்று மணல் ஆகியவற்றை மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |