ஒரே கல்ப்... டென்னிஸ் போட்டியின் போது இளம்பெண் செய்த செயல்! இணையத்தை கலக்கும் வீடியோ
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது விளையாட்டை பார்க்க வந்த இளம்பெண் ஒருவர் ஒரே கல்பில் பீர் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் Roberto Bautista-Agut மற்றும் Felix Auger-Aliassime இடையேயான போட்டி 5 செட்கள் வரை கிட்டதட்ட 4 மணிநேரம் நீடித்தது.
இறுதியில் 6:3, 6:4, 4:6, 3:6, 6:3 என்ற செட் கணக்கில் Felix Auger-Aliassime வெற்றிப்பெற்றார்.
3வது செட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, விளையாட்டை பார்க்க வந்த இளம்பெண் ஒருவர் கையில் பீர் கிளாஸுடன் இருப்பதை கமெராமேன் பெரிய திரையில் காட்டினார்.
பெரிய திரையில் தான் தெரிவதை கண்ட பெண், கூச்சப்படாமல் கையில் வைத்திருந்து கிளாஸ் பீரை ஒரே கல்பில் அடித்து மிரள வைத்தார்.
பின்னர், மீண்டும் 5வது செட்டின் போது அதே பெண்ணை கமெராமேன் காட்டினார், ஆனால் அப்போது அவர் கையில் பீர் இல்லை.
ROUND 2 pic.twitter.com/cQ0UtHpeLP
— Barstool Sports (@barstoolsports) September 4, 2021
எனினும், தன்னை படம் பிடிப்பதை அறிந்த இளம்பெண், அருகில் இருந்த நண்பரிடம் இருந்து கிளாஸ் பீரை பிடிங்கி அதையும் ஒரே கல்பில் அடித்தார்.
இளம்பெண் இரண்டு முறை ஒரு கிளாஸ் பீரை கல்ப் கல்பாக அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.