பெரு நிறுவன CEO-க்களை விட அதிகமாக சம்பாதிக்கும் கல்லூரி மாணவி: அவரது தொழில்?
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என கனவு காண்பது எளிது, ஆனால் அதை அடைவதற்கு நிறைய முயற்சி மற்றும் தியாகம் தேவை.
சாதிக்க வேண்டும்
வெகு சிலர் மட்டுமே அப்படியான கனவுகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றி சாதித்துள்ளனர். அப்படியான ஒருவரின் கதை மில்லியன் கணக்கானோரை ஊக்குவிக்கும் என்பது உறுதி.

லக்னோவைச் சேர்ந்த அனுஷ்கா ஜெய்ஸ்வால், விவசாயத்தின் மீதான தனது ஆர்வத்தைத் தொடர கல்லூரி வேலைவாய்ப்புகளை எவ்வித தயக்கமும் இன்றி நிராகரித்தார்.
டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு, கல்லூரி வேலைவாய்ப்பு பருவத்தில், அவர் ஒரு நல்ல வேலையைப் பெறுவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், தேடி வந்த ஒரு வாய்ப்பையும் அவர் ஏற்கவில்லை.
தற்போது 29 வயதான அந்த இளம்பெண்ணின் குறிக்கோள், அடிமட்ட அளவில் பெரிய அளவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே. பொழுதுபோக்காக மொட்டை மாடியில் தக்காளி உட்பட சில செடிகளை வளர்த்த அவருக்கு, திடீரென்று அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
விவசாயத்தை தனது தொழிலாக்க வேண்டும் என முடிவு செய்த அவர், தோட்டக்கலை விவசாயத்தை ரசிக்கத் தொடங்கினார். இன்று, அவர் ஆண்டுதோறும் சுமார் ரூ.1 கோடி சம்பாதிக்கிறார்.

இந்தியாவில் பெரு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளின் சராசரி ஆண்டு சம்பளம் ரூ 31.4 லட்சம் என்றே இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டுமே ஆண்டுக்கு ரூ 10 கோடி வரையில் சம்பளம் அளிக்கின்றனர்.
ரூ 1 கோடி சம்பாதிக்கிறார்
ஆனால் அனுஷ்காவின் கதை அதுவல்ல, தமக்கு மிகவும் பிடித்தமான வேலையில், எந்த மன அழுத்திற்கும் இடமின்றி, ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பாதிக்கிறார்.

ஒரு நாள் மாலை வேளை, அனுஷ்கா தனது விருப்பத்தை தனது சகோதரருடன் பகிர்ந்து கொண்டார். அவர் அவளை ஊக்குவித்து, தனது கனவைத் தொடரச் சொன்னார். இதனையடுத்து நொய்டாவில் உள்ள தோட்டக்கலை தொழில்நுட்ப கல்லூரியில் தோட்டக்கலை படிப்பைத் தொடர்ந்தார்.
தனது படிப்பு மற்றும் விவசாயம் தொடர்பான பிற கூடுதல் படிப்புகளை முடித்த பிறகு, அனுஷ்கா 2020 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பாலிஹவுஸ் பண்ணையைத் தொடங்கினார்.

தற்போது அவர் லக்னோ மக்களுக்கு சிறப்பு காய்கறிகளை வழங்கி ஒரு நற்பெயரைப் பெற்று வருகிறார். 24 வயதில் ஆங்கில வெள்ளரிகளை வளர்க்கத் தொடங்கினார். தனது முதல் அறுவடையிலேயே 51 டன் மகசூலைப் பெற்றார்.
தனது ஆரம்ப வெற்றியால் ஊக்கமடைந்த அவர், மற்ற காய்கறிகளையும் வளர்க்கத் தொடங்கினார். இன்று, அவர் ஒவ்வொரு ஆண்டும் 200 டன்களுக்கு மேல் குடை மிளகாய்களை உற்பத்தி செய்கிறார்.
இன்று, அனுஷ்கா தனது விவசாயத்தை விரிவுபடுத்தி 6 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |