கீழே கிடந்த பொருளை எடுத்த சிறுமி: 3800 ஆண்டுகால பொக்கிஷம்..ஒரே இரவில் பிரபலம்
இஸ்ரேலில் சிறுமி ஒருவர் கண்டெடுத்த பொருளால் ஒரே இரவில் பிரபலமானார்.
பழங்கால பொருள்
தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு, மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
ஷிவ் நிட்சான் என்ற அந்த சிறுமி பழங்கால பொருள் ஒன்றை கண்டெடுத்தார். தனது பெற்றோரிடம் அதனை சிறுமி கொடுத்துள்ளார்.
உடனே அவர்கள் இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையத்திடம் (IAA) தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரபலமான சிறுமி
அதனைத் தொடர்ந்து அப்பொருளை சோதித்தபோது 3,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்து என தெரிய வந்தது.
பின்னர் சிறுமி ஷிவ்வுக்கு நல்ல குடியுரிமைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இஸ்ரேலின் தொல்பொருள் ஆணைய இயக்குநர் கூறுகையில்,
"இஸ்ரேல் நாட்டின் தேசிய பொக்கிஷத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த ஷிவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு நன்றி. அனைவரும் அதைப் பார்த்து மகிழ முடியும். பஸ்கா பண்டிகையை முன்னிட்டு, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு கண்காட்சியில் இந்த முத்திரையை நாங்கள் வழங்குவோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |