திருமண கனவுடன் கனடாவிலிருந்து காதலனை பார்க்க வந்த பெண் மாயம்: அம்பலமான அதிர்ச்சி சம்பவம்
திருமண கனவுடன் கனடாவிலிருந்து காதலனை பார்க்க வந்த இளம்பெண் மாயமான நிலையில், ஒன்பது மாதம் கழித்து எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் இதன் பின்னணியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
கனடாவுக்கு வேலைக்கு சென்ற பெண்
இந்தியாவின் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள பாலந்த் கிராமத்தைச் சேர்ந்த நீலம் என்ற 23 வயது பெண் IELTS தேர்வில் தேற்சி கனடாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர், ஜூன் மாதம் அவர் திடீரென காணாமல் போயுள்ளார். நீலத்தின் சகோதரி ரோஷ்னி மறுநாள் கன்னூர் பொலிஸில் புகார் செய்தார்.
Sunil Land - NDTV
காதலன் மாயம்
அதே கிராமத்தில் உள்ள நீலத்தின் குடும்பத்தினருக்கு அவளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால், நீலம் காணாமல் போன அதே நாளில் அவரது காதலன் சுனிலும் காணாமல் போனதைக் கண்டறிந்தனர்.
பின்னர், இதுகுறித்து கடத்தல் வழக்கு பதிவு செய்த பொலிஸார், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. வீணாக நீலத்தை தேடிய குடும்பம், ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பின்னர் இந்த வழக்கு பிவானியில் உள்ள சிஐஏவுக்கு மாற்றப்பட்டது, இறுதியில் சுனில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுக்குதிரும்ப அழைத்து கொலை
சுனிலை பொலிஸார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சுனில் தனது காதலி நீலத்தை கொலை செய்து புதைத்துவிட்டு தலைமறைவனது தெரியவந்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில், சுனில் அவரை திருமணம் செய்வதற்காக இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வந்தான், அதைத் தொடர்ந்து அவளைக் கடத்திச் சென்று கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுனில் அவரை தலையில் இரண்டு முறை சுட்டு, பின்னர் ஆதாரங்களை அழிக்க அவரது உடலை தனது வயலில் புதைத்துள்ளார்.
எலும்புக்கூடாக மீட்பு
சுனில் கொடுத்த தகவலின் அடிப்படையில், கார்ஹி சாலையில் உள்ள அவரது வயலில் 10 அடி ஆழத்திலிருந்து நீலத்தின் எலும்புக்கூட்டை அதிகாரிகள் தோண்டி எடுத்தனர். எச்சங்கள் சோனிபட் சிவில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அங்கு அவர்கள் அவரது தாயுடன் டிஎன்ஏ பரிசோதனையும் நடத்தவுள்ளனர்.
இந்நிலையில், சுனில் மீது கொலை மற்றும் சட்டவிரோத கைத்துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது ஏற்கெனவே குற்றச் செயல்களின் வரலாறு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.