சிறுமி கூட்டாக சீரழிக்கப்பட்டு கல்லால் அடித்துக் கொலை... தந்தையும் சடலமாக மீட்பு: வெளிவரும் பகீர் சம்பவம்
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறுமி ஒருவர் கூட்டாக சீரழிக்கப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும் இன்னொரு உறவினரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் காதுப்ரோடா கிராமத்திலேயே ஜனவரி 29 அன்று இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீரழித்து கொல்லப்பட்ட 16 வயது சிறுமியின் சகோதரர் கடந்த 2ம் திகதி அளித்த புகாரில், தமது தந்தையும் சகோதரியும் உள்ளிட்ட மூவர் வீடு திரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் ஆறு பேர் மீது பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிந்துள்ளனர்.
இவர்களில் பிரதான குற்றவாளியான சாந்த்ரம் மன்ஜ்வார் என்பவரும் ஒருவர். இவரின் குடியிருப்பிலேயே கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை கூலிவேலை செய்து வந்துள்ளார்.
பொலிசார் வெளியிட்ட தகவலில், சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட அந்த குடும்பம் சாந்த்ரம் மன்ஜ்வார் என்பவருடன் பயணம் செய்துள்ளனர்.
செல்லும் வழியில் சாந்த்ரம் மன்ஜ்வாரின் நண்பர்கள் சிலரும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், அந்த மூவரையும் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, 16 வயது சிறுமியை கூட்டாக சீரழித்துள்ளனர்.
மட்டுமின்றி, இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, சிறுமியின் தந்தை மற்றும் அவரின் 4 வயதேயான பேரப்பிள்ளை என மூவரையும் கல்லால் அடித்து கொன்றுள்ளனர்.
பின்னர் சடலத்தை அந்த காட்டுப்பகுதியிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.
இதனிடையே, சிறுமியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், சாட்சிகளின் உதவியுடன், முக்கிய குற்றவாளி சாந்த்ரம் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.