தந்தை வயதுள்ள நபரை திருமணம் செய்ய வற்புறுத்தல்., மொட்டையடித்து செருப்பை நக்கவைத்த சித்திரவதை வீடியோ..
பாகிஸ்தானில் தந்தை வயதுள்ள ஆணை திருமணம் செய்ய கல்லூரி மாணவி வற்புறுத்தப்பட்டுள்ளார்.
அதற்குமாறுப்பு தெரிவித்ததாக மொட்டை அடித்து, புருவ முடிகள் சிறைக்கப்பட்டு, செருப்பை நக்கவைத்து பல கொடுமைகளை அனுபவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கல்லூரிப் பெண், தனது தோழியின் தந்தையை திருமணம் செய்ய மறுத்ததற்காக சித்ரவதை செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
லாகூரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசலாபாத்தில் ஆகஸ்ட் 8-ஆம் திகதி இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.
சந்தேக நபர்களால் மாணவி தாக்கப்பட்டு, தலை மற்றும் புருவங்களை மொட்டையடித்து, சந்தேக நபர்களின் காலணிகளை நக்கச் செய்த சம்பவத்தின் வீடியோ செவ்வாய்க்கிழமை வெளிவந்தது.
ஷேக் டேனிஷ், அவரது மகள் அன்னா
முக்கிய சந்தேக நபரான ஷேக் டேனிஷ், அவரது மகள் மற்றும் மேலும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய சோதனைகள் நடந்து வருவதாக பஞ்சாப் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஷேக் டேனிஷின் மகள் அன்னா இறுதியாண்டு பல் மருத்துவ மாணவியாவார். அவர் மீது கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 சந்தேக நபர்கள் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது வயதான தாயுடன் வசித்து வந்தார் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ளனர்.
எப்ஐஆரில், பாதிக்கப்பட்ட பெண், தானும் டேனிஷின் மகளும் நண்பர்கள் என்றும், அவருடைய குடும்பத்தினருடன் தனக்கு குடும்ப உறவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
In Faisalabad: After refusing to marry a man twice her age, a medical student was kidnapped from her home and tortured by accused Sheikh Danish Ali and his family. pic.twitter.com/jB2SSLdY7p
— The Express Tribune (@etribune) August 17, 2022
"அண்ணாவின் தந்தை ஷேக் டேனிஷ் என்னிடம் திருமணத்திற்கு முன்மொழிந்தார், ஆனால் எனது குடும்பத்தினரும் நானும் அந்த திட்டத்தை நிராகரித்தோம். டேனிஷ் என் தந்தையின் வயதுடையவர், இதை நான் அண்ணாவிடம் சொன்னபோது, அவர் என் மீது கோபமாக இருந்தார்," என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண், ஆகஸ்ட் 8-ஆம் திகதி, தனது சகோதரர் பிரித்தானியாவில் இருந்து திரும்பியபோது, டேனிஷ் மற்றும் அவரது 14 கூட்டாளிகள் தனது வீட்டிற்கு வந்து தனது சகோதரனை திருமண முன்மொழிவை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினர்.
அவரது சகோதரர் இந்த முன்மொழிவை நிராகரித்ததால், ஷேக் டேனிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இளம்பெண் மற்றும் அவரது சகோதரரை சித்திரவதை செய்து வலுக்கட்டாயமாக டேனிஷின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர்கள் மீண்டும் அவர்களை துன்புறுத்தியுள்ளனர். சந்தேகநபர்கள் சிறுமியை டேனிஷின் காலணிகளை நக்க வற்புறுத்தி, தலை மற்றும் புருவங்களை மொட்டையடித்து, அவமானப்படுத்தி படம் பிடித்துள்ளனர்.
شیخ دانش اور اسکی بیٹی انا علی کی تصویر ہے جس نے اپنی دوست خدیجہ کو اپنے باپ سے شادی کرنے پر مجبور کیا اور انکار پر تشدد۔ ریپ ۔ جوتے چٹواے
— Amir Ghazi (@GaziAmirGujar) August 17, 2022
پولیس نے جب شیخ دانش کے گھر پر ریڈ کیا تو بھاری مقدار میں شراب اور اسلحہ برآمد ہوا
اس لڑکی کو اتنا وائرل کریں جتنا خدیجہ کو کیا گیا ہے pic.twitter.com/5bQHgCqhX4
டேனிஷ் பின்னர் அப்பெண்ணை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, அதனை பதிவு செய்ததாகவும் எஃப்ஐஆர் கூறுகிறது.
சந்தேகநபர்கள் அவர்களது கைத்தொலைபேசிகளையும் பறித்துக்கொண்டு, 5 லட்சம் ரூபாய் பணத்தை மிரட்டி பணம் பறித்ததோடு, ரூ.450,000 மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், டேனிஷ் ரூ.10 லட்சம் பணம் கேட்டதாகவும், அந்தத் தொகையை வழங்காவிட்டால், வீடியோ கிளிப்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவோம் என்றும் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட காவல்துறையிடம் கூறியுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பர்வேஸ் இலாஹி இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, இந்த வழக்கில் சந்தேகப்படும்படியான அனைவரையும் கைது செய்து அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்யுமாறு பஞ்சாப் காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.