அமெரிக்காவில் மாயமான சிறுமி இளம்பெண்ணாகத் திரும்பி வந்த விவகாரம்: வீட்டுக்குள் கேட்ட சத்தம்
அமெரிக்காவில் காணாமல் போன ஒரு சிறுமி, நான்கு ஆண்டுகளுக்குப் பின் இளம்பெண்ணாக பொலிஸ் நிலையம் ஒன்றை வந்தடைந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
திடீரென மாயமான இளம்பெண்
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த அலிஷியா (Alicia Navarro), 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார்.
அம்மா, நான் வீட்டை விட்டு போகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால், சத்தியமாக திரும்பிவந்துவிடுவேன் என ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு அவள் மாயமாகியிருந்தாள்.
அவளை ஒன்லைனில் சந்தித்த யாரோ அவளை ஏமாற்றி, எங்கோ கொண்டு சென்றுவிட்டதாக அவளது தாயார் புகாரளிக்க, FBI அவளை தீவிரமாகத் தேடிவந்தது.
பொலிஸ் நிலையத்துக்கு வந்த இளம்பெண்
இந்நிலையில், சமீபத்தில், கனடா எல்லையிலுள்ள Montana மாகாண பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார்.
தான்தான் காணாமல் போன அலிஷியா என அவர் கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உடனடியாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவங்கியுள்ளார்கள்.
கடந்த புதன்கிழமை அலிஷியா பொலிசாரை சந்தித்த பொலிஸ் நிலையத்தின் அருகிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிற்குள் சுமார் 10 பொலிசார் நுழைந்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து கைவிலங்கிடப்பட்ட ஒருவர் பொலிசாரால் அந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளார்.
வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்
தற்போது அலிஷியா குறித்து மேலும் சில புதிய தகவல்கள் வெலியாகியுள்ளன. அலிஷியா தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் சிலர், நடந்த சில விடயங்கள் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, அலிஷியாவும், கைது செய்யப்பட்ட 20 வயதுகளிலிருக்கும் ஒரு ஆணும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் ஒரு ஆண்டு காலமாக வாழ்ந்துவந்ததாக அங்கு வாழும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அலிஷியா பொலிஸ் நிலையம் செல்வதற்கு முந்தைய நாள், அவள் அந்த 20 வயதுகளிலிருக்கும் இளைஞருடன் வாழ்ந்துவந்த வீட்டில், இருவருக்கும் வாக்குவாதம் நடக்கும் சத்தம் கேட்டதாக Garrett Smith (22) என்பவர் தெரிவித்துள்ளார்.
Image: National Center for Missing & Exploited Children
நான் திரும்பிப் போகிறேன் என அலிஷியா கூறியதைத் தான் கேட்டதாக Garrett தெரிவித்துள்ளார். அடுத்த நாள் அலிஷியா பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
ஆக, அலிஷியாவின் தாய் சந்தேகப்பட்டது உண்மைதானோ என்றே தோன்றுகிறது. அலிஷியா காணாமல் போனதால் அவளது குடும்பத்தினர் கவலையில் மூழ்கியிருக்க, FBI அவரைத் தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, அலிஷியா அதே அமெரிக்காவில் இன்னொரு மாகாணத்தில்தான் வாழ்ந்துவந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |