அக்கா போட்டு கொடுத்த திட்டம்: உயிருக்கு உயிராக காதலித்த காதலனை போட்டு தள்ளிய தங்கை! பொலிசில் சொன்ன காரணம்

Crime India Investigation Murder
By Balakumar Jan 29, 2021 04:58 PM GMT
Report

தமிழகத்தில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆனதால், காதலி அவரை உறவினருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், இருக்கும் பாலூத்து என்ற இடத்தில், கடந்த 21-ஆம் திகதி எரிந்த நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தது திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(29) என்வர் தெரியவந்தது.

இவர் காணமல் போய்விட்டதாக கடந்த 15-ஆம் திகதி அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி பிரேதபரிசோதனையிலும் இவர் கொலை செய்யப்பட்டு தான் இறந்திருக்கிறார் என்பதும் உறுதியானதால், பொலிசார் இந்த சம்பவம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆனந்தராஜுன் சொந்த ஊர் எங்கோ இருக்க, இவர் இங்கு இறந்து கிடந்தது எப்படி என்று பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த விஜயகாந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார், அவரை பார்க்க சென்றவர் தான் திரும்பி வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் விஜயசாந்தியை தேடிக் கொண்டிருந்த போது, விஜயசாந்தி அவருடைய உறவினர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லுவது பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக பொலிசார் இருவரையும் விரட்டி பிடித்துள்ளனர். அதன் பின் விஜயசாந்தியிடம் மேற்கொண்ட விசாரணையில், நான் ஆனந்தராஜை உயிருக்குயிராக காதலித்தேன். ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். ஆனந்தராஜுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.

நான் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பிரபாகரனை அழைத்துகொண்டு, ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டேன்.

அப்போது எங்களுக்குள் தகராறு வரவும், ஆத்திரத்தில் நாங்கள் இருவரும் ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டோம்.

அதன் பின், சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, திண்டுக்கல்லில் ஆசைப்பாண்டி என்பவர் வீட்டில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம்.

இந்த கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்தது, என் அக்கா வித்யா தான் என்று கூற, பொலிசார் விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் என 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Gallery
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US