சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்! இப்படி பயன்படுத்தினாலே போதும்
சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கப்படும், நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் என அனைத்துமே மருத்துவ பயன்கள் கொண்டவை.
நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் கொண்டுள்ளது.
பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாக காணப்படும் நித்திய கல்யாணியை, அழகுத் தாவரமாக வீடுகளிலும் வளர்க்கின்றனர்.
இதன் இலைகள் கசப்பு தன்மை கொண்டதால் ஆடு, மாடுகள் உட்கொள்வதில்லை.
இச்செடி ரத்த புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளதாக ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் ரத்த அழுத்தம் மற்றும் மனரீதியான நோய்களை குணப்படுத்தவும் முடியும் என தெரியவந்துள்ளது.
மிக முக்கியமாக சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என்றே நித்திய கல்யாணி செடியை குறிப்பிடலாம். இதை எப்படி பயன்படுத்தினால் பலன்களை பெறலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
பயன்படுத்துவது எப்படி?
* நித்திய கல்யாணியின் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.
* ஐந்து முதல் 10 வரை நித்திய கல்யாணி பூக்களையும், தேவைக் கேற்ப சீரகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் கலந்து, ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி குடித்து வர, சர்க்கரை நோயின் அளவு குறையும்; ரத்த அழுத்தம் இருந்தாலும் சீராகும்.
* நித்திய கல்யாணி பூவை எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.