ஆசிய நாடொன்றில் தோழியின் தந்தையை திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை! புகைப்படங்கள்
தோழியின் தந்தையை மணக்க மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவிக்கு நடந்த தொடர் கொடுமை
புகாரையடுத்து 7 பேர் அதிரடி கைது
பாகிஸ்தானில் தனது மகளின் தோழியை கடத்தி வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கொடுமைப்படுத்திய நபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான கடீஜா தனது தோழியான அனா அலி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது அனாவின் தந்தை தனீஷ் அலிக்கு கடீஜாவை மிகவும் பிடித்து போன நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் இதற்கு கடீஜா ஒப்பு கொள்ளாத நிலையில் கடந்த 8ஆம் திகதி தனீஷ், கடீஜாவை கடத்தி தனது இடத்திற்கு கொண்டு வந்தார். அங்கு உடலளவில் மற்றும் மனதளவில் கடீஜாவை தனது நண்பர்களுடன் சேர்ந்து துன்புறுத்தியிருக்கிறார்.
mmnews
மேலும் கடீஜாவின் தலைமுடியை வெட்டி மொட்டையடுத்துள்ளார். இதோடு அங்கிருப்பவர்களின் காலணிகளை நாக்கால் நக்கும் அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான புகாரில் தனீஷ், அவர் மகள் அனா உள்ளிட்ட 7 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கடீஜா வீட்டில் இருந்து விலையுயர்ந்த செல்போன், ரூ. 500,000 பணம், ரூ. 450,000 மதிப்புடைய வளையல்களையும் தனீஷ் திருடியது தெரியவந்தது.
கடீஜா கூறுகையில், என் இரண்டு சகோதரர்களும் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். நான் வயதான தாயாருடன் வசிக்கிறேன். அனாவின் தந்தை என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அவருக்கும் என தந்தை வயது என்ற நிலையில் அதை நிராகரித்து விட்டேன். இதை நான் அனாவிடம் சொன்னபோது, அவளும் என் மீது கோபமாக இருந்தார்.
2GBZK
இதோடு நான் ரூ 1 மில்லியன் பணம் தராவிட்டால் என்னுடைய வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் அவர்கள் மிரட்டினார்கள் என கூறியுள்ளார்.
இதனிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கூட தண்டனையில் இருந்து தப்பக்கூடாது என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வீஸ் எலாஹி உத்தரவிட்டுள்ளார்.