பிரித்தானியாவில் பள்ளி சீருடைக்கு தடை விதிக்க கோரும் மாணவிகள்! சொன்ன அதிர்ச்சி காரணம்
பிரித்தானியாவில் ஆபாச வீடியோவில் பள்ளி சீருடைகளுக்கு தடை விதிக்கக் கோரி அரசு பள்ளி மாணவிகள் மனு அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் குழு சீருடைகளை ஆபாச படங்களில் பயன்படுத்துவதற்கும், பாலியல் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தில் சீருடைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது.
அந்த மனுவில் 13,400க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அதற்கான காரணத்தை அவர்கள் கூறியது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும்போதும், வீதிகளில் நடந்து செல்லும்போதும் பாலியல் சீண்டல்களுக்கு தாங்கள் ஆளாவதாகவும், பலர் தகாத முறையில் அழைப்பதாகவும் அதற்கு காரணம் இந்த சீருடை தான் என்றும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
PC: Victoria Mann/CBC
இதற்கு காரணம் இதே சீருடையை தான் ஆபாச படங்களில் பயன்படுத்தி, அதில் நடிக்கும் பெண்களை பள்ளி மாணவிகளை போல் சித்தரிப்பதாகவும், அதனை பார்க்கும் நபர்கள் வெளியுலகில் அந்த சீருடைகளை அணிந்த மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் இவ்வாறு பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பள்ளி சீருடைக்கு பதில் தங்கள் சொந்த ஆடைகளை அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு இதுபோன்ற தொல்லைகள் குறைந்திருந்தாக மாணவிகள் சிலர் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகலால் அரசியல் நிச்சயமற்ற சூழலில், இந்த மனு மீது அரசு நடவடிக்கை எடுப்பது தள்ளி போயுள்ளதாக கூறப்படுகிறது.
PC: Victoria Mann/CBC