இளவயது உக்ரேனிய சிறுமி... கால்களில் குண்டடிபட: கொண்டாடும் உலக இணையவாசிகள்
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்களில் துப்பாக்கியால் சுடுவதையும் பொருட்படுத்தாமல், காயம்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு மீட்டுச் சென்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த 15 வயது சிறுமியின் துணிவை இணையவாசிகள் தற்போது கொண்டாடி வருகின்றனர். உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதி குறித்த சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளின் ஷெல் தாக்குதல் வாகன சாரதியை பலத்த காயப்படுத்தியதால், 15 வயதேயான சிறுமி அப்போது சாரதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முனைப்பில், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்மணியுடன் குறித்த சிறுமியும் சாரதியும் தங்கள் வாகனத்தில் வேகமாக விரைந்துள்ளனர்.
அப்போது இரண்டாவது முறையும் அந்த வாகனம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ரஷ்ய துருப்புகளால் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதியின் ஊடாக சுமார் 20 மைல்கள் தொலைவு பயணப்பட்டு அவர் மருத்துவமனை ஒன்றை நாடியுள்ளது பின்னர் தெரியவந்தது.
காயங்களுடன் தப்பிய பெண் உட்பட்ட நால்வரை Bakhmut பகுதிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால், ரஷ்ய துருப்புகளின் தாக்குதலை பொருட்படுத்தாமல் வாகனத்தை செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினோம், ஆனால் தாமும் தமது மாமாவும் ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்கானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை, தெருவுக்குள் மட்டும் எப்போதேனும் வாகனம் செலுத்திய அனுபவம் மட்டுமே தமக்கு இருந்தது என கூறும் அந்த சிறுமி, ஒருவழியாக சமாளித்து, கண்ணிவெடிகளுக்கு நடுவே, சிக்காமல் வாகம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்ததாகவும், தமது காலில் குண்டடிபட்டதை தம்மால் உணர முடிந்தது எனவும், இருப்பினும் துணிந்து சாரதியாக செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிமியின் துணிச்சலை தற்போது சமூக ஊடக பக்கத்தில் உலக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022