அரிய குறைபாட்டால் 1,000 நாள்களுக்கு மேலாக மாதவிடாயால் அவதிப்படும் பெண்
பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு 21 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை இரத்தபோக்கு நீடிக்கும்.
1000 நாள்களுக்கு மேலாக மாதவிடாய்
வயது, ஹார்மோன் அளவுகள், கருத்தடை பயன்பாடு மற்றும் மன அழுத்தம், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைப் பொறுத்து இது மாறுபடும்.
ஆனால் டிக்டொக்கில் வீடியோ வெளியிடும் Poppy என்ற பெண், 1000 நாட்களுக்கு மேலாக மாதவிடாயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு தொடர்ந்து 2 வாரங்கள் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கவலையடைந்த அவர் மருத்துவ உதவியை நாடியுள்ளார். இன்னும் ஒரு வாரம் காத்திருந்தால், தானாகவே சரியாகுமா என்று பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இரத்தப்போக்கு நிற்காத நிலையில், அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனையை நாடி, பல்வேறு சிகிச்சைகள், பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
கருப்பையின் உட்புறத்தை ஆய்வு செய்யும் ஹிஸ்டரோஸ்கோபி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அவரது இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த கருப்பையக சாதனம் (IUD) ஒன்று பொறுத்தப்பட்டது. ஆனால் இரத்தப்போக்கு தொடர்ந்துள்ளது.
இதயவடிவிலான கருப்பை
அவரை டிக்டாக்கில் பின்தொடர்பவர், ஒரு சாத்தியமான நோயறிதலைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பின்னர் செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு இதய வடிவிலான கருப்பை இருப்பது தெரிய வந்தது.
இதுவே அவரின் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளது. பைகார்னுவேட் கருப்பை(bicornuate uterus) என்றும் அழைக்கப்படும் இந்த அரிய பிறவி குறைபாடு, உலகளவில் 5% க்கும் குறைவான பெண்களையே பாதித்துள்ளது.
இந்த குறைபாடுள்ள பெண்கள், தொடர் கருச்சிதைவுகள் அல்லது கருவுறுதல் பிரச்சினைகளை அனுபவிக்கும் வரை இது குறித்து அறிந்திருக்க மாட்டார்கள்.
அவருக்குள்ள குறைபாடு கண்டறியப்பட்டாலும், இரத்தப்போக்கு இன்னும் நீடித்து வருகிறது. தற்போது கருப்பையில் பொருத்தப்பட்ட IUD சாதனத்தை அகற்ற திட்டமிட்டுள்ளார். மேலும், கருப்பையின் வடிவத்தை மாற்றவதற்கான அறுவை சிகிச்சை செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |