தங்கைகளைக் கொன்றுவிட்டு தாய்க்கு சிறுமி அனுப்பிய குறுஞ்செய்தி: அதிர்ச்சி தகவல்
ரஷ்யாவில், 13 வயது சிறுமி ஒருத்தி, தனது தங்கைகள் இருவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தன் தாய்க்கு ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளாள்.
தனது தங்கைகள் இருவரை கத்தியால் குத்திக் கொன்ற சிறுமி
யூரி, ஐரினா தம்பதியருக்கு ஐந்து பிள்ளைகள். 2, 5, 10, 13 மற்றும் 18 வயதுள்ள அந்த பிள்ளைகளில், சிறு பிள்ளைகள் இருவரை அவர்களுடைய 13 வயது சகோதரி கவனித்துக்கொண்டிருந்திருக்கிறாள்.
Image: Social media/east2west newss
அவர்களில் அந்த 10 வயது சிறுமி வீட்டுக்கு வரும்போது, தன் 2 மற்றும் 5 வயதுடைய தங்கைகள் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறாள்.
விடயம் என்னவென்றால், அந்த நேரத்தில் அவர்களுடைய தாயும், அவரது காதலரும் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்கள்.
தன் காதலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஐரினா புகாரளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் தன் தங்கைகளைக் கொன்றிருக்கிறாள் அந்த 13 வயது சிறுமி. அவர்களுடைய உடலில் கடிபட்ட காயங்களும் உள்ளன.
Image: Investigative Committee/east2west news
தகவலறிந்து ஐரினா என்ன நடந்தது என அந்த 13 வயது சிறுமியிடம் கேட்க, அவளோ, ’ஹா ஹா ஹா, நான்தான் அவர்களைக் கொன்றேன்’ என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள்.
தன் பிள்ளைகள் கொல்லப்பட்டதை அறிந்த பிள்ளைகளின் தந்தையான யூரி, வீட்டுக்குள் சென்று பிள்ளைகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்திருக்கிறார்.
வெகு நேரமாக பேச்சுவராமல் அவர் அதிர்ச்சியில் அமர்ந்திருந்ததாக அக்கம்பக்கத்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்யாவைப் பொருத்தவரை, பல நாடுகளைப்போலவே, அந்த சிறுமிக்கு 13 வயதே ஆவதால், அவள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Investigative Committee/east2west news
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |