சிறுமியின் பற்களின் இடையில் இருந்த விஷப்பாம்பு! அதிர்ந்த பெற்றோர்... நம்பமுடியாத ஒரு அதிர்ச்சி சம்பவம்
துருக்கியில் தன்னை தீண்டிய பாம்பை 2 வயது சிறுமி ஆத்திரத்தில் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர் கிராமத்தில் தான் இச்சம்பவம் கடந்த வாரத்தில் நடந்துள்ளது. வீட்டின் கொல்லைபுறத்தில் 2 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த போது அவளின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தார் அங்கு ஓடி வந்தனர்.
அப்போது சிறுமியின் உதட்டில் பாம்பு கடித்த அடையாளமும், பற்களின் இடையில் பாம்பு இருப்பதையும் கண்டு குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

navbharattimes
இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது சிறுமி குணமடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சிறுமியின் தந்தை மெமத் எர்கான் கூறுகையில், உண்மையில் அல்லாஹ் தான் என் மகளை பாதுகாத்தார்.
அவள் கையில் பாம்பு இருந்ததாகவும், அதனுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் பின்னர் பாம்பு என் மகளை கடித்ததையடுத்து அதற்கு வினையாக அவள் பாம்பை கடித்துள்ளார் எனவும் அக்கம்பக்கத்தினர் என்னிடம் கூறினார்கள் என தெரிவித்துள்ளார். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        