ஸ்பைடர் மேன் உடையணிந்த சிறுவனை தாக்கிய பெண்- வீடியோ வைரல்
ஸ்பைடர் மேன் போல உடையணிந்து வந்த பள்ளி மாணவனை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் அய்டின் பெடோன் என்பவர் சூப்பர் ஹீரோ கேரக்டர் ஸ்பைடர் மேன் போல் உடையணிந்து நின்று கொண்டிருந்தான்.
அப்போது பூங்காவிற்கு வந்த பலரும் அய்டினை ரசித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த பெண் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் சிறுவனுக்கு மூக்கின் வழியாக இரத்தம் வந்தது.
பின்பு, அந்த மாணவன் தனது முகமூடியை கழற்றியுள்ளான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், அய்டினின் தாயார் ஷெல்லி பெடோன் தனது பேஸ்புக் பக்கத்தில் "என் மகன் பொழுதுபோக்கிற்காக ஸ்பைடர் மேன் போல உடையணிந்ததால் தாக்கப்பட்டார்.
அவர்களை விட வித்தியாசமாக இருப்பதற்காக குறிவைக்கப்பட்டார். மேலும் கூட்டத்தில் இருந்து தனித்து நிற்கும் தைரியம் மற்றும் அவராகவே இருக்க வேண்டும் என்பதற்காக கொடூரமாக தாக்கப்பட்டார்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |