கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி.. பிளேடால் முகத்தை கிழித்து.. கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்
மகாராஷ்டிராவில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலரை பொலிசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்து பார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த பொலிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பரிசோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் கொலை குறித்து பொலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த பெண்ணுடன் ஒரு வாலிபர் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் வினை ராய் என்றும் இருவரும் காதலர்கள் என்று தெரிய வந்தது. பொலிசார் அந்த இளைஞரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் அவர் கூறியதாவது, இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். வினய்கு ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்து அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். என்னை ஏமாற்ற நினைத்தால் நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறி தினமும் குடைச்சல் கொடுத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட கோவத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார் வினய். அப்போது பெண்ணின் கை, கால்களை தனி தனியாக வெட்டி, பிளேடால் முகத்தை பல முறை கிழித்து கொடூரமாக கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்