இனி திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்! சீனா அறிவிப்பு
சீன நாடானது, தங்கள் மக்கள் தொகையை அதிகரித்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது.
அதாவது புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாட்கள் விடுமுறை, மகப்பேறு விடுமுறையில் இருப்பவர்களுக்கு சம்பளம், இளைஞர்கள் காதலிப்பதற்காக கல்லூரிகள் விடுமுறை போன்ற சலுகைகளை கொடுத்துள்ளன.
image - Marketplace.org
இருப்பினும் விலைவாசி அதிகரிப்பு, குழந்தையை பராமரிப்பதற்கான செலவு அதிகரிப்பு, கல்வி செலவு போன்ற காரணங்கள் சீனர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமணமாகாத பெண்களும் சம்பளத்துடன் மகப்பேறு விடுமுறை எடுத்து, செயற்கை கருவுற்றல் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே இனி திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
image - Fortune