வெளி உலகுக்கு அழகிய இன்ஸ்டாகிராம் மொடல்... ஆனால் உண்மையில்: அழகியின் பகீர் பின்னணி
வெளி உலகுக்கு ஆயிரக்கணக்கானோர் பின்தொடரும் ஒரு இன்ஸ்டாகிரம் மொடலாக இருக்கும் ஒரு அழகிய இளம்பெண், உண்மையில் ஒரு கொலைகார போதை கும்பலை நடத்துபவர் என கருதி பொலிசார் அவரைத் தேடி வருகிறார்கள்.
பிரேசில் நாட்டவரான Jennifer Rovero, 17,200 பேர் பின்தொடரும் ஒரு பிட்னஸ் மொடல். ஆனால், அவர் ஒரு போதை மற்றும் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும், அந்த பணத்தில்தான் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகிறது.
Jenniferஉடன் தொடர்புடைய அந்த கும்பல் 21 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்களில் 17 பேர் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் நடந்த பல கொலைகளுக்கு Jenniferஇன் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Jennifer, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஆடம்பர கார்களில் ஆடம்பரமான இடங்களுக்குச் சென்று விலையுயர்ந்த டிசைனர் உடைகளை வாங்கி அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம்.
Jennifer செலவு செய்யும் அந்த பணம் இந்த போதை, கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் மூலம் கிடைத்தது என பொலிசார் கருதுவதால், அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.