மகளிர் உலகக் கிண்ணம் 2025யில் கவர்ச்சி நட்சத்திரங்கள்: முதலிடத்தில் யார் தெரியுமா?
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் துணிச்சலான கவரும்படியான வீராங்கனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் மகளிர் உலகக் கிண்ணம் 2025 போட்டித் தொடரில், தங்களது ஆட்டம் மட்டுமின்றி வசீகரத்தாலும் பல வீராங்கனைகள் ரசிகர்களை கவர்கிறார்கள்.
அந்த வகையில், ஸ்மிருதி மந்தனா முதல் ஹர்லீன் தியோல் வரை உள்ள துடிப்பான வீராங்கனைகளில் சிறந்த 10 பேர் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
10.சோபி டிவைன் (Sophie Devine)
நியூசிலாந்து அணித்தலைவரான சோபி டிவைன் துடுப்பாட்டத்தில் வெடிக்கக் கூடியவர் ஆவார். தனது தலைமைப் பண்பால் வெற்றிகளை குவிக்கும் இவர், புன்னகை முகத்துடன் ரசிகர்களை கவர்கிறார்.
9.அன்னெரி டெர்க்சென் (Annerie Dercksen)
துடிப்பான தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வீராங்கனையான அன்னெரி டெர்க்சென், துடுப்பாட்டத்தில் இறுதிக்கட்டத்தில் மிரட்டக்கூடியவர். அத்துடன் சீம் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்படும் இவர், பிரகாசமான தோற்றத்தாலும் மைதானத்தில் பார்வையாளர்களை கவர்கிறார்.
8.லாரென் பெல் (Lauren Bell)
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான லாரென் பெல் எதிரணி துடுப்பாட்ட வீராங்கனைகளை மிரள வைக்கும் தன்மை கொண்டவர்.
இவரது நிதானமான மற்றும் மொடல் போன்ற நடத்தை சிரமமில்லாத நேர்த்தியை சேர்ப்பதால் பார்வையாளர்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்.
7.சார்லி டீன் (Charlie Dean)
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான சார்லி டீன், துல்லியமான பந்துவீசுவதால் எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துபவர் ஆவார்.
இவரது பிரகாசமான புன்னகை மற்றும் தடகள உடல் அமைப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
6.அலிஸ் கேப்சி (Alice Capsey)
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அலிஸ் கேப்சி ஸ்ட்ரோக்பிளேவுக்கு பிரபலமானவர். அத்துடன் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்.
இவரது புத்துணர்ச்சியான முகமும், ஸ்டைலான இருப்பும் ஒரு தனிச்சிறப்பான ஆளாக காட்டுகிறது.
5.லவ்ரா வோல்வார்ட் (Laura Wolvaardt)
தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் லவ்ரா வோல்வார்ட் அதிரடியான துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். அதேபோல் நிலையான தலைமை பண்புடையவரும் ஆவார்.
இவரது அழகான நுட்பம் மற்றும் மிரளவைக்கும் அம்சங்கள் அழுத்தத்தின் கீழ் நிதானத்தை உள்ளடக்கியது.
4.அமேலியா கெர் (Amelia Kerr)
இடக்கை சுழற்பந்து வீச்சாளரான அமேலியா கெர் (நியூசிலாந்து) சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் பந்துவீச்சிலும் மிரட்டக்கூடியவர்.
அமேலியாவின் இளமையான வசீகரம் மற்றும் கூர்மையான அம்சங்கள் அவரை சமூக ஊடக விருப்பமானவராகவும் ஆக்குகிறது.
3.ஹர்லீன் தியோல் (Harleen Deol)
இந்திய அணி வீராங்கனையான ஹர்லீன் தியோல் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்படுவதுடன் ஃபீல்டிங்கில் அசர வைப்பவர் ஆவார். இவரது டைவிங் ஸ்டைல் மற்றும் அழகு பார்வையளர்களை கவர்கின்றன.
2.ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana)
இந்திய அணி நட்சத்திர வீராங்கனையும், துணைத் தலைவருமான ஸ்மிருதி மந்தனா அற்புதமான ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்துபவர் ஆவார்.
இவரது துடுப்பாட்ட ஷாட்கள் கவர்வதுடன் அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை ஈர்க்கிறார்.
1.எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry)
அவுஸ்திரேலியாவின் மிரட்டலான ஆல்ரவுண்டர் வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி, அபாரமான ஆட்டத்தை துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் வெளிப்படுத்தக் கூடியவர்.
இவரது அழகும், செயல்திறன் மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |