பிரான்ஸ் பெண் அமைச்சர் போஸ் கொடுத்த கவர்ச்ச்சிப் பத்திரிகை: மூன்றே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த 100,000 பத்திரிகைகள்...
பிரான்ஸ் பெண் அமைச்சர் ஒருவர் பிளேபாய் பத்திரிகைக்கு போஸ் கொடுத்த நிலையில், ஒரு பக்கம், அமைச்சர் இப்படி செய்யலாமா என விமர்சனம் எழுந்தது. மறுபக்கமோ, அமைச்சர் போஸ் கொடுத்த பத்திரிகைகள் மூன்றே மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கவர்ச்சிப் பத்திரிகைக்கு போஸ் கொடுத்த அமைச்சர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அமைச்சரவையில், பிரான்ஸ் சமூகப் பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சு கூட்டமைப்புகளுக்கான அமைச்சராக இருப்பவர் மார்லீன் ஷியப்பா (Marlene Schiappa).
Image: Stevens Tomas/ABACA/REX/Shutterstock
இவர், பிளேபாய் பத்திரிகையின் ஏப்ரல் மாத வெளியீட்டில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருந்ததுடன், அவரது நேர்காணலும் அந்த பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது.
அதற்காக, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் ( Élisabeth Borne) உட்பட பலர் மார்லீன் மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
Image: Playboy
மூன்றே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த பத்திரிகைகள்
ஒரு பக்கம், ஒரு அமைச்சர் இப்படிச் செய்யலாமா என விமர்சித்துக்கொண்டே, மறுபக்கம், வெளியான 100,000 பத்திரிகைகளையும் மூன்றே மணி நேரத்தில் வாங்கிக் குவித்துவிட்டார்கள் மக்கள்.
Image: AFP via Getty Images
இப்போது, மீண்டும் கூடுதலாக 60,000 பத்திரிகைகளை அச்சடித்துக்கொண்டிருப்பதாக பிளேபாய் இயக்குநரான Jean-Christophe Florentin தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், பொதுவாக, ஒரு வெளியீட்டில், சுமார் 30,000 பிளேபாய் பத்திரிகைகள்தான் விற்குமாம்!
Image: AFP/Getty Images