தமிழ்ப் பெண்ணை மணந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: வானவில் குழந்தையை வரவேற்கும் ஜோடி
தமிழர் வம்சாவளிப் பெண்ணை திருமணம் செய்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது முதல் குழந்தையை வரவேற்கவுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) மற்றும் அவரது மனைவி தமிழ் வம்சாவளிப் பெண்ணான வினி ராமன் இருவரும் தங்கள் முதல் குழந்தையை செப்டம்பர் 2023-ல் வரவேற்கின்றனர்.
க்ளென் மேக்ஸ்வெல்-வினி ராமன் திருமணம்
மேக்ஸ்வெல்லும் வினி ராமனும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (2022) திருமணம் செய்துகொண்டனர். தமிழ் பின்னணியை கொண்ட வினி ராமன் தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்ல. அவர் பிறக்கும் முன்பே வினியின் பெற்றோர் அவுஸ்திரேலியா சென்றுவிட்டனர்.
ஆனாலும் அவர்கள் தமிழ் பாரம்பரியத்தை பின்பற்றி வந்துள்ளனர். அதனால்தான் அவர்களின் திருமணத்தின்போதும் திருமண பத்திரிக்கையை தமிழர் பாணியில் மஞ்சள் நிறத்தில் அடித்தனர். அவர்களின் திருமண அறிவிப்பின்போது இருவரும் பிரபலமாக பேசப்பட்டனர்.
ViniRaman
வினி ராமன் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில், வினி ராமன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியூட்டும் செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டார். அதில், "கிளென்னும் நானும் எங்கள் வானவில் குழந்தையை வரும் செப்டம்பர் 2023-ல் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார்.
மேலும், "இந்தப் பயணம் மிகவும் சுமூகமானதாகவோ அல்லது சுலபமாகவோ இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்வது மிகவும் முக்கியம். இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான செய்தியை நங்கள் எப்போது அறிவிப்போம் என யோசிபவர்களுக்கு இந்த பதிவு எவ்வளவு வேதனையான இருக்கும் என்பதை நான் அறிவேன்.
கருவுறுதல் அல்லது கரு இழப்புடன் போராடும் மற்ற ஜோடிகளுக்கு நாங்கள் எங்கள் அன்பையும் வலிமையையும் அனுப்புகிறோம்" என்று ராமன் தனது பதிவில் எழுதினார்.
அவரது பதிவிற்கு பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
வானவில் குழந்தை என்றால் என்ன?
அவரது அடுத்த பதிவில், வானவில் குழந்தை என்றால் என்ன என்பதாய் அறியாத நபர்களுக்கும் ஒரு விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
அதில், வானவில் குழந்தை என்பது கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம், மோலார் கர்ப்பம், மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்தல், பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த பிறகோ குழந்தை இறந்துபோவது என ஏதேனும் ஒரு வகையில் கருவை இழந்த பிறகு பிறக்கும் குழந்தையே வானவில் குழந்தை என்று அழைக்கப்படுகிறது எனறு கூறினார்.
ViniRaman