சிக்ஸர்மழையில் 46 பந்துகளில் சதமடித்த பிலிப்ஸ்! இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து
New zealand beat india by 87 runs: இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூஸிலாந்து 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஈடன் பார்க்கில் நடந்த டி20 போட்டியில் க்ளென் பிலிப்ஸ் அதிரடி சதம் விளாச, நியூசிலாந்து அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
க்ளென் பிலிப்ஸ் அதிரடி சதம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ஓட்டங்கள் குவித்தது. க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 49 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் விளாசினார்.
மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்தார். மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்திய அணி தோல்வி
பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக திலக் வர்மா 35 ஓட்டங்களும், நமன் திர் 28 (13) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜேக்கப் டுஃபி 4 விக்கெட்டுகளும், மேத்யூ ஃபிஷர் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
