உலகளவில் 19.27 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு; 41.41 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.41 லட்சத்தை தாண்டியது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.27 கோடியைக் கடந்துள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,141,891 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 192,788,882 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 175,320,778 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 82,182 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.