எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக உள்ளது! உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை!

Warning United Nations Climate Change IPCC Global Warming
By Ragavan Aug 09, 2021 08:50 PM GMT
Report

புவி வெப்பமடைதலின் வேகம் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருப்பதாக ஐ.நா அமைப்பின் குழ ஒன்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு (Intergovernmental Panel on Climate Change-IPCC ) என்பது பல்வேறு அறிவியலாளர்களை கொண்ட ஒரு குழுவாகும்.

இந்த ஐ.பி.சி.சி. அமைப்பானது 1988-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பால் இணைந்து உருவாக்கப்பட்டது.

இதன் நோக்கம் என்பது உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல் பூர்வ தகவல்களை அளிப்பதாகும்.

எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக உள்ளது! உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை! | Global Warming Cross Crucial Limit Un Report Ipcc

எனவே அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் 2050ல் தான் புவி வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட வேகமாக புவி வெப்பம் அதிகரித்து வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ பி சி சி இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் மதிப்பீட்டு அறிக்கை ( FAR) 1990-ஆம் ஆண்டு உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்தும் வெளியிட்டது.

இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை (SAR-Second Assesment Report) 1995-ஆம் ஆண்டு உலக அளவில் காலநிலை மாற்றத்திற்கு மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் என்பது தொடர்பானது.

மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை (TAR) 2001-ஆம் ஆண்டு கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.

நான்காவது மதிப்பீட்டு அறிக்கை (AR4) 200-ஆம் ஆண்டு உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றை கண்காணித்ததின் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கு இடமின்றி தெளிவாகியதாக கூறப்பட்டிருந்தது.

ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (AR5) 2014-ஆம் ஆண்டு வெஅனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புவி வெப்பம் அடைதல் வேகம் குறைந்தால் நாம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலும்.

ஆனால் தற்போது 20 ஆண்டுகளில் அதன் தாக்கம் அதிகரித்தால் உலகம் பல்வேறு இயற்கை பேரிடரை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி உலகில் உள்ள 60 சதவிகிதம் உயிரினங்கள் வெப்பம் தாக்கம் காரணமாக மரணிக்கும் அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுகிறது காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு. 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US